‘சாண்டிக்கு ஓட்டு போடுங்க’ : நெட்டிசன் பேச்சால் கடுப்பான சாண்டியின் மனைவி!

 

‘சாண்டிக்கு ஓட்டு போடுங்க’  : நெட்டிசன் பேச்சால் கடுப்பான சாண்டியின்  மனைவி!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சாண்டிக்கு வாக்களியுங்கள் என்று அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சாண்டிக்கு வாக்களியுங்கள் என்று அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார். 

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 4 போட்டியாளர்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் யார் பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற போகிறார்கள் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது சிலர் முகின்  தான் வெற்றியாளர் என்று சொல்லி கொண்டிருக்க, சிலரோ லாஸ்லியாவுக்கு தான் முதலிடம் என்று உறுதியாகச் சொல்லிவருகின்றனர்.

sandy

அதேசமயம் போட்டியிலும் சரி, கேரக்டரிலும் சரி பிக் பாஸ் வீட்டில் அனைவராலும் ஈர்க்கப்பட்ட சாண்டி  இந்த முறை பிக் பாஸ் டைட்டிலை தட்டி செல்வார் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில் சாண்டியின்  மனைவி சில்வியா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், சாண்டி மாஸ்டருக்கு வாக்களியுங்கள். எப்போதும் ஹீரோ மட்டும் தான் வெற்றி பெற வேண்டுமா? ஏன் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் ஒருவர் வெற்றி பெற கூடாதா? என்று கேள்வி எழுப்பி, தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vote for Sandy master !! ?? Why only a Hero should win always ?? Why not an Entertainer win this time ???

A post shared by Dorathy Sylvia ✌? (@dorathy_sylviasandy) on

இதையடுத்து  சில்வியாவின் போஸ்டை பார்த்த ஒருவர், முகன் டைட்டிலை வின் பண்ணுவதற்கு தகுதியானவர். அவரிடம் திறமைகள் பல உள்ளன என்று கமெண்ட் செய்ய, கடுப்பான சாண்டி மனைவி, உங்களுக்கு முகினை பிடித்தால் அவருக்கு வாக்களியுங்கள். அதற்காக மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.