சாட்டை 2 படப்பிடிப்பில் சேட்டை செய்த அதுல்யா! வைரலாகும் வீடியோ!

 

சாட்டை 2 படப்பிடிப்பில் சேட்டை செய்த அதுல்யா! வைரலாகும் வீடியோ!

நடிகை அதுல்யா சாட்டை 2 படப்பிடிப்பில் சேட்டை செய்யும்  வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகை அதுல்யா சாட்டை 2 படப்பிடிப்பில் சேட்டை செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா. அதையடுத்து  கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் போன்ற  படங்களில் கதாநாயகியாக  மட்டும் இன்றி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவர் தற்போது சமுத்திரக்கனியுடன் அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 

athulya

இந்நிலையில் எப்போது சமூக வலைத்தளங்களில் படு சுறுசுறுப்பாக இருக்கும் அதுல்யா தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சாட்டை 2  படத்தின் படப்பிடிப்பின் போது  டெக்னீஷியன் ஒருவரின் காதை பிடித்து அதுல்யா இழுத்துள்ளார்.

காதை இழுத்தது அதுல்யா என்று தெரியாமல் அவர் அதிர்ச்சியுடன் திரும்பி பயமுறுத்த வர, ஆனால் அதுல்யா என்று தெரிந்ததும் சிரித்து கொண்டே செல்வது போல் இந்த வீடியோ அமைந்துள்ளது. 

இதையும் படிங்க:அரசியல் கட்சியில் நானா? பரவிவரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விவேக்!