சாக்‌ஷிக்கு திருமணமானது உண்மையா? வனிதா விஜயகுமார் ஓபன் டாக்!

 

சாக்‌ஷிக்கு திருமணமானது  உண்மையா? வனிதா விஜயகுமார் ஓபன் டாக்!

பிக் பாஸ் போட்டியாளராகக் களமிறங்கியுள்ள சாக்‌ஷி அகர்வால் திருமணமாகி விவாகரத்து ஆனவரா என்ற கேள்விக்கு வனிதா விஜயகுமார் பதிலளித்துள்ளார். 

சாக்‌ஷிக்கு திருமணமானது  உண்மையா? வனிதா விஜயகுமார் ஓபன் டாக்!

பிக் பாஸ் போட்டியாளராகக் களமிறங்கியுள்ள சாக்‌ஷி அகர்வால் திருமணமாகி விவாகரத்து ஆனவரா என்ற கேள்விக்கு வனிதா விஜயகுமார் பதிலளித்துள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களமிறங்கி இருப்பவர் சாக்‌ஷி . இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்தில் நடித்திருந்தார். சாக்‌ஷி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே கவினுடன் நட்பாக பழகிவந்தார். ஒருகட்டத்தில் இவர்கள் நட்பு காதலாக  மாற, சுதாரித்துக் கொண்ட கவின் காதலா அதெல்லாம் இல்லை என்று கூறி ஜகா வாங்கினார். இதனால் மனமுடைந்த சாக்‌ஷி  கடந்த 10 நாட்களாக  ஒரே அழுக்காட்சியாக இருக்கிறார். இதுஒருபுறமிருக்க, சாக்‌ஷி 2011ம் ஆண்டில் திருமணமாகி விவாகரத்தானவர் என்ற செய்தி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. ஆனால்  இதன் உண்மைத் தன்மை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

இந்நிலையில்   சாக்‌ஷி குறித்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில், சாக்‌ஷி  ஒரு உண்மையானவள். ஆனால் அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளார். நான் அவளை அறிவேன், அவளை நேசிக்கிறேன். தயவுசெய்து  அவளை வெறுக்காதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு   சாக்‌ஷி  விவாகரத்து பெற்றவர் என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வனிதா, அவருக்கு திருமணமே ஆகவில்லை பின்பு எப்படி விவாகரத்து? வதந்திகளைப்  பரப்பாதீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.