“சாக்ரடீஸ் சம்மந்தி மகன் தினகரனுக்கு அரிஸ்டாடில் அக்கா மகன் சவால்” – அமைச்சர் உதயகுமார் கிண்டல்

 

“சாக்ரடீஸ் சம்மந்தி மகன் தினகரனுக்கு அரிஸ்டாடில் அக்கா மகன் சவால்” – அமைச்சர் உதயகுமார் கிண்டல்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளார்.

மதுரை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் 243 பேருக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விழாவில் கலந்துகொண்டு அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “சாக்ரடீஸ் சம்மந்தி மகன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் தெரிவித்த கருத்திற்கு, அரிஸ்டாடில் அக்கா மகனான நான் சவால் விடுகிறேன், தினகரன் கூறுவதுபோல் நாங்களும் தொண்டர்களை தான் வேட்பாளராக நிறுத்துவோம், குண்டர்களை அல்ல” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தங்களை எதிர்த்து நிற்க தினகரன் தாயாரா என்று உதயகுமார் எழுப்பியிருந்த கேள்விக்கு உதயகுமார் டெபாசிட் கூட வாங்க முடியாது என தினகரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.