சாகும் முன் மகனின் கனவை நிறைவேற்றிவிட்டு ; கூலி தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை!

 

சாகும் முன் மகனின் கனவை நிறைவேற்றிவிட்டு ; கூலி தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை!

‘கல்விக் கட்டங்களை அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கிற நேரத்தில் கல்வித்துறை கடுமை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறது.

‘கல்விக் கட்டங்களை அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கிற நேரத்தில் கல்வித்துறை கடுமை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறது.ஆனாலும் பள்ளி நிர்வாகங்கள் கட்டங்களை வசூலிப்பதில் காட்டும் கெடுபிடி குறையாததால், ஒரு கூலி தொழிலாளியின் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட கொடூரம் நாகையில் நடந்திருக்கிறது!

school

நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்தவர்  செந்தில்குமார்.கூலி தொழிலாளி. இவரது மனைவி-லெட்சுமி. இவர்களது மகன் ஜெகதீஸ்வரன்,அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். வறுமையான வாழ்க்கை என்றாலும் ஜெகதீஸ்வரன் படைப்பதில் அதிகம் ஆர்வம் உள்ளவராம்.படித்து முடித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்பது அவரது விருப்பமாம். எல்லாமே, குறிப்பிட்ட தனியார் பள்ளியின் கெடுபிடியால் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது.

nagai

பள்ளிக்கூடம் திறந்து பத்து நாட்கள் ஆகிறது.ஜெகதீஸ்வரனுக்கான கல்விக் கட்டணத்தை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்று செந்தில்குமாரும் எவ்வளவோ முயற்சி பண்ணியிருக்கிறார். கட்டணத்துக்கான  பணத்தை புரட்ட முடியவில்லை.இந்த நிலையில் கட்டணத்தைக் கட்டச் சொல்லி பள்ளி நிர்வாகம் கடுமையான நெருக்கடி கொடுக்கவும்,சாப்பாட்டில் விஷம் கலந்து மகனுக்கு கொடுத்து விட்டு கணவன்,மனைவி இருவரும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

suicide

இது குறித்து தகவல் அறிந்ததும்,அங்கு வந்த போலீஸ் பார்க்கும்போது… பெற்றோரின் மடியில் போலீஸ் சீருடையோடு பெற்றோரின் மடியில் பிணமாக கிடந்துள்ளான்.அப்போதுதான் தெரிந்திருக்கிறது.தங்களது மகன் உயிரோடு இருந்து போலீஸ் அதிகாரி ஆகவில்லை என்றாலும்,மரணத்திலாவது மகனின் ஆசையை தீர்த்து வைப்போம் என்று,அந்த ஏழைப் பெற்றோர்,விஷத்தை சாப்பிடுவதற்கு முன்பு அவர்களது மகனுக்கு போலீஸ் சீருடை போட்டு அழகு பார்த்திருக்கிறார்கள் என்று..!

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையால்…இன்னொரு உயிர் போவதற்கு முன்னால் இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா!?