சாகித்திய அகாதமி விருது பெறுகிறார் சசிதரூர் எம்.பி!.

சாகித்திய அகாதமி விருது பெறுகிறார் சசிதரூர் எம்.பி!.

இந்த ஆண்டும் தென் தமிழக எழுத்தாளர் ஒருவருக்கே சாகித்திய அகாதமி விருது வழங்கபட்டு இருக்கிறது. சோ.தருமனின் சூல் என்கிற நாவல் சாகித்திய அகாதமி விருது பெற்றதில் இன்னொரு சுவாரசியம் இருக்கிறது. தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படம் எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவியது.

sool

பூமணி ஏற்கனவே தனது அஞ்ஞாடி நாவலுக்காக (2014) சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.பூமணி சோ.தருமனின் மைத்துனர்!.அதாவது ஒரே குடும்பத்தில் இரண்டு அகாதமி விருதாளர்கள்.ஏற்கனவே,கரிசல் காட்டு எழுத்தாளர்கள் இன்னொரு சாதனையும் செய்திருக்கிறார்கள்.இடைச்செவல் பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களான கு.அழகிரிசாமி தனது அன்பளிப்பு சிறுகதைத் தொகுதிக்காக 1970-ல்’,கோபல்ல கிராமத்து மக்கள்’ நாவலுக்காக 1991-ல் கி.ராஜநாராயணனும் சாகித்திய அகாதமி விருதைப் பெற்று இருக்கிறார்கள்.

pooomani

சோ.தருமன் உட்பட 23 எழுத்தாளர்களுக்கு சாகித்திய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெறும். காங்கிரஸ் கட்சித்தலைவரும் திருவனந்தபுரம் பாராளுமன்றத் தொகுதி உறுபினருமான சசிதரூர் எழுதிய ‘எரா ஆஃப் டார்க்னெஸ்’ என்கிற ஆங்கில நாவலும் இந்த ஆண்டு பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறது.

sasi

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் எஜிபி கட்சியின் முன்னணி தலைவருமான பிரபுல்ல குமார் மகிந்தாவின் மனைவி ஜெயஸ்ரீ கோஸ்வாமிக்கும் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அசாமில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மக்கள் போராடி மக்கள் செத்துக் கொண்டு இருக்கும் 
இந்த நேரத்தில் விருது தனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று ஜெயஸ்ரீ சொல்லி இருக்கிறார்.