சவூதி இளவரசர் பெயரில் ஃபோர்ஜரி…எத்தனை வருசமா இப்படி நடந்திருக்கிறது தெரியுமா!?

 

சவூதி இளவரசர் பெயரில் ஃபோர்ஜரி…எத்தனை வருசமா இப்படி நடந்திருக்கிறது தெரியுமா!?

தன்னை சுற்றி எப்போதும் ஜிம் பாய்ஸ் ஆட்களின் பாதுகாப்பு என அவன் காட்டிய அளப்பறையில் மயங்கி…சவுதி இளவரசருக்கு அங்கே என்ன மரியாதை கிடைக்குமோ அதில் குண்டு மணி அளவுகூட குறையவிடாமல் கொடுத்திருக்கிறார்கள்.

சீட்டு கம்பெனி,ஈமு கோழி வளர்க்கிறதில் முதலீடு போட்டால் மூணு ராத்திரிக்குள்ளே கோடீஸ்வரன் ஆயிரலாம் என்று எவனாவது ஆடம்பரமாக விளம்பரம் பண்ணினால் கவலையே படாமல் முதலீடு செஞ்சு ஏமாறுகிற பழக்கம் நம்ம ஊர்ல மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தால்…வெறி ஸாரி பாஸ்,அமெரிக்காவுலயும் அப்படிதான் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த சம்பவம் இருக்க முடியாது!

அமெரிக்காவில் உள்ள மியாமி மாகாணத்தில் ஒரு நபர் தான் ஒரு சவுதி இளவரசர்.என்னோட பேர் ‘காலித் பில் அல் சவுத்’ என நம்பவைத்து, அங்குள்ள பிரஷர் தீவில் தனி ராஜாங்கமே நடத்தி வந்திருக்கிறான்.ஃபெராரி கார் ,தூதரக ரீதியிலான லைசென்ஸ் பிளேட்,தன்னை சுற்றி எப்போதும் ஜிம் பாய்ஸ் ஆட்களின் பாதுகாப்பு என அவன் காட்டிய அளப்பறையில் மயங்கி…சவுதி இளவரசருக்கு அங்கே என்ன மரியாதை கிடைக்குமோ அதில் குண்டு மணி அளவுகூட குறையவிடாமல் கொடுத்திருக்கிறார்கள்.

சரி,மரியாதை கொடுக்கிறதில் ஒன்னும் குறையப்போவதில்லை…இளவரசர் நம்மளோட வங்கியில் வழுவா இன்வெஸ்ட் பண்ணுவார் என்று நம்பி அவனது வாங்கி கணக்கில் நம்ம ஊர் பணத்துக்கு கிட்டத்தட்ட 56 கோடியைக் கொடுத்திருக்கிறார்கள்.இந்த நாடகம் ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை முப்பது வருசமா நடந்திருக்கு.பயபுள்ள துளியளவு சந்தேகம் கூட வராத அளவுக்கு ஆட்டயப்போட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்த்திருக்காப்புல!

மைல்டா சந்தேகம் வந்து விசாரித்த போதுதான் இவ்வளவு விசயமும் வெளியில வந்திருக்கு.அவனோட ஒரிஜினல் பெயர் -ஆண்டனி ஜிக்நாக் (வயது 48). அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 18 வருட சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறது மியாமி கோர்ட்.

ஊருக்கெல்லாம் நாட்டாமை நாங்கதான் என்று சொல்கிற அமெரிக்காவிலேயே இப்படி ஏமாந்திருக்காய்ங்களே என்னத்த சொல்ல !?.