சவுதி சென்றடைந்த பிரதமர் மோடி! ஏராளமான ஒப்பந்தங்கள் நிறைவேறும் என எதிர்பார்ப்பு

 

சவுதி சென்றடைந்த பிரதமர் மோடி! ஏராளமான ஒப்பந்தங்கள் நிறைவேறும் என எதிர்பார்ப்பு

இரண்டு நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு கிளம்பி சென்ற பிரதமர் மோடி நேற்று இரவு அங்கு சென்றடைந்தார். பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி மன்னர் சல்மான் தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதனையடுத்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கிளம்பி சென்றார். நேற்று நேரவு சவுதியின் தலைநகர் ரியாத் சென்றடைந்தார். 

சவுதி சென்றடைந்த மோடி

பிரதமர் மோடி இது குறித்து டிவிட்டரில், சவுதி அரேபியாவில் இறங்கி விட்டேன். ஒரு மதிப்புமிக்க நண்பருடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்க போகிறேன் என பதிவு செய்து இருந்தார். 

சவுதி பட்டத்து இளவரசருடன் மோடி

பிரதமர் மோடி சவுதியில் ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3வது அமர்வில் கலந்து கொள்கிறார். அதில் இந்தியாவுக்கு அடுத்து என்ன? என்ற தலைப்பில் அவர் பேசுகிறார். அதன்பிறகு சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் சந்தித்து பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.