சவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்?.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா

 

சவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்?.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா

ஒரிரு தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் ஈரான் தான் உள்ளது என அமெரிக்கா செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

ஒரிரு தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் ஈரான் தான் உள்ளது என அமெரிக்கா செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

crude oil

சவுதி அரேபியா உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் சில எண்ணெய் கிணறுகளில் ஆளில்லா விமானம் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதனால் ஐந்து மில்லியன் அளவிலான கச்சா எண்ணெய் பீப்பாய்கள் எரிந்து நாசமாகின. அதேநேரம் உற்பத்தியின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 12 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இது குறித்து ட்விட் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கையிருப்பு வைத்துள்ள கச்சா எண்ணெய் பீப்பாய்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள உத்தரவிடுகிறேன். ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது யார் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். சவுதி அரேபியா அதை கண்டறியும் varai மௌனம் காப்பதே சரியாக இருக்கும் என்றார்.

saudi attack

இதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மாக் பாம்பியோ இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் அரசு இருக்கின்றது என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

தற்போது அமெரிக்க அரசு தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆதாரமாக வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் உளவுத்துறை இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் அரசு இருக்கிறது என்பதையும் உறுதி செய்துள்ளது. 

இந்நிலையில் மற்றும் பல உரிய ஆதாரங்களுடன் தாக்குதல் குறித்து முழு ஆவணத்தை சவுதி அரேபியா அரசிடம் அமெரிக்கா விரைவில் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.