சவுக்கிதார் மோடி ஸ்டைலில் நாங்களும் களமிறங்குகிறோம்- இயக்குநர் பாக்யராஜ்

 

சவுக்கிதார் மோடி ஸ்டைலில் நாங்களும் களமிறங்குகிறோம்- இயக்குநர் பாக்யராஜ்

சவுகிதார் எனக் கூறி மோடி தேர்தலை சந்தித்தது போல நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாப்பதற்காக விஷால் அணியை எதிர்த்து போட்டியிடுகிறோம் என இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட நடிகர் பாக்யராஜ் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ்,  “எங்கள் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயரிட்டுள்ளோம். அணியில் உள்ளவர்களின் விருப்பத்திற்கிணங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். சவுகிதார் எனக் கூறி மோடி தேர்தலை சந்தித்தது போல நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாப்பதற்காக விஷால் அணியை எதிர்த்து போட்டியிடுகிறோம். விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

 நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை” எனக் கூறினார்.