சளி தொல்லையா இருக்கா? டோன்ட் வர்ரி! இதை பயன்படுத்துங்க!

 

சளி தொல்லையா இருக்கா? டோன்ட் வர்ரி! இதை பயன்படுத்துங்க!

நம்ம எல்லார் வீடுகளிலும், வீட்டு கிச்சனில் தவறாமல் இடம்பிடித்திருக்கும் ‘மஞ்சள்’. பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும் மஞ்சளில் ஏராளமான சக்தி உள்ளது. குறிப்பாக சளி பிரச்சினைகளுக்கு இது ஆகச் சிறந்த நிவாரணி.

நம்ம எல்லார் வீடுகளிலும், வீட்டு கிச்சனில் தவறாமல் இடம்பிடித்திருக்கும் ‘மஞ்சள்’. பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும் மஞ்சளில் ஏராளமான சக்தி உள்ளது. குறிப்பாக சளி பிரச்சினைகளுக்கு இது ஆகச் சிறந்த நிவாரணி.

women

குளிர்காலங்களில் அடிக்கடி சோர்வாகவும் ,காய்ச்சல் வருவது போல் உணர்கிறீர்களா? இதற்கு ஒரு சிறந்த தீர்வும் நிவாரணமும் உள்ளது.மேலும் இந்த குளிர்காலம் அதிகமாக நோய்த்தொற்றுகளை கொண்டு வரும். பொதுவாகவே குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் நம் சருமத்தில் வறட்சியைக்கொண்டுவரும் இதனுடன் சளி பிரச்சனைகளையும் கொண்டு வரும் இதிலிருந்து விடுபட இயற்கை தரும் அருமருந்துக்கு மிஞ்சி ஆங்கில மருத்துவம் ஒன்றும் செய்யமுடியாது. சளி பிரச்சனைக்கு ஒரு இயற்கையான தீர்வு தான் ‘மஞ்சள்’ 

turmeric

மஞ்சள் பல நன்மைகளை தனக்குள் வைத்திருக்கிறது. இது ஆன்ட்டி இன்பலமேட்டரி, ஆன்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் போன்றவற்றை தனக்குள் வைத்துள்ளது. ஆதலால் குளிர்காலத்தில் உங்கள் உடல்நல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக மஞ்சளை பயன்படுத்துங்கள். 

மஞ்சளை பயன்படுத்தி உங்களுக்கு சில மருத்துவ குணம்கொண்ட ரெசிபிக்களை கொண்டுவந்துள்ளோம்!

ரெசிபி 1:

தேவையான பொருட்கள்:

1.சுடு தண்ணீர் -1 கப் 
2.நன்கு அரைத்த ஃபிரெஷ் இஞ்சி-1/2 டீஸ் ஸ்பூன்
3.அரைத்த  ஃபிரெஷ் மஞ்சள் -1/2 டீஸ் ஸ்பூன் 

ginger

4.லெமன் -1/2 பழத்தை ஜூஸ் எடுத்துக்கொள்ளவும் 
5.கேரட்-1
6.மிளகு தூள்-சிறிதளவு 
7.இலவங்கப்பட்டை தூள்-சிறிதளவு 

இவையனைத்தையும் நன்கு கலந்து குடித்துவந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் சோர்வுகள் மாறும். சளியிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

ரெசிபி -2:

1.பால் 
2.மஞ்சள் தேவையான அளவு 

turmeric

நீங்கள் தினமும் குடிக்கும் தேனீர், காப்பி போன்றவற்றை தவிர்த்து அதற்கு பதில் பாலுடன் மஞ்சளை கலந்து குடித்து வந்தால் உங்கள் சளி பிரச்சினைகளிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். 

மஞ்சள் பல நன்மைகளை தனக்குள் வைத்துள்ளது. மேலும் இதில் ஆன்டி இன்பலமேட்டரி தன்மை கொண்ட கர்குமின் இருப்பதால் இது வீக்கத்தை குறைப்பதோடும் ஆர்த்ரிடிஸ் நோயாளிகளுக்கு உண்டாகும் மூட்டு வலிகளையும், களைப்பையும் போக்கவல்லது. 

turmeric

மேலும் மஞ்சள் களைப்பை உண்டாக்கும் செல் டேமேஜிலிருந்து உங்களை காக்கும் .நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள மஞ்சள் மூளை செயல்பாட்டையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.

இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள மஞ்சளை தினமும் உங்கள் உணவில் சேர்த்து உடல் நலனை வலுப்படுத்துங்கள்!