‘சளி,காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் கோவிலுக்கு வராதீங்க’..மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறிவுறுத்தல்!

 

‘சளி,காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் கோவிலுக்கு வராதீங்க’..மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறிவுறுத்தல்!

கொரோனாவால் இந்தியாவில் முதன்முதலாகச் சவுதியிலிருந்து திரும்பிய 70 வயது முதியவர் உயிரிழந்தது மக்களை இன்னும் பீதி அடையச் செய்தது. 

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் முதன்முதலாகச் சவுதியிலிருந்து திரும்பிய 70 வயது முதியவர் உயிரிழந்தது மக்களை இன்னும் பீதி அடையச் செய்தது. 

ttn

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு, ஒருவரிடம் இருந்து 1 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும் தொட்டுப் பேசக் கூடாது என்றும் கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகமாகக் கூட்டம் கூடும் இடங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

ttn

இதன் எதிரொலியாக, நாட்டின் பல கோவில்கள் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. குறிப்பாகத் திருப்பதி, சபரிமலை, திருவனந்தபுரம் பத்மநாபர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலயங்களில் கையுறை, முகமூடி உள்ளிட்டவை அணிந்து கொண்டு தான் வரவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன், கொரோனா அறிகுறி இருப்பவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ttb

இந்நிலையில், புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், இருமல்,சளி, காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று அக்கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதே போல, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலிலும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.