சல்மான்கானை சந்திக்க ரசிகர் செய்த செயல்… பிரமித்துப்போன பொதுமக்கள்

 

சல்மான்கானை சந்திக்க ரசிகர் செய்த செயல்… பிரமித்துப்போன பொதுமக்கள்

எல்லா நடிகர்களும் தங்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ளனர். பல ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகரைப் பார்ப்பது தவம் என நினைத்து  காத்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் தங்களின் ஸ்டாரைக் காண எந்த வித எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றனர்.

எல்லா நடிகர்களும் தங்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ளனர். பல ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகரைப் பார்ப்பது தவம் என நினைத்து  காத்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் தங்களின் ஸ்டாரைக் காண எந்த வித எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. சல்மான் கானை சந்திக்க ஓர் நபர் 600 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணத்து வந்துள்ளார். 

bhupen-likson

அஸ்ஸாமை சேர்ந்த ரசிகர் ஒருவர் நீண்ட  நாட்களாக சல்மானை சந்திக்க வேண்டுமென்று ஆவலோடு காத்திருந்தார். அசாமில் உள்ள டின்சுகியாவைச் சேர்ந்த பூபன் லிக்சன்(52), சல்மான் கானின் மிகத் தீவிரமான ரசிகர். இந்த ஆண்டு கௌஹாத்தியில் நடைபெறும் பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்து கொள்ளப் போவதை அறிந்த  பூபன் தன்னுடைய அபிமான நடிகரை சந்திக்க முடிவு செய்தார். தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சல்மானை சந்திக்க கௌஹாத்திக்குச் சென்றார். ஒரு நடிகரைச் சந்திக்க ஒரு நபர் 600 கிலோமீட்டருக்கு மேல் சைக்கிளில் பயணம் செய்து வந்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

salman-khan-cycling

2013 ஆம் ஆண்டில், பூபன் மிதிவண்டியின் கைப்பிடியை பிடிக்காமலேயே 60 நிமிடங்களில் 48 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து சாதனை ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ இடம் பிடித்துள்ளார். சல்மானும் சைக்கிள் ஓட்டுவதை பெரும்பாலும் விரும்புபவர், மேலும், பெரும்பாலும் மும்பை தெருக்களில் சைக்கிள் ஓட்டுவதைக் காணலாம். சல்மானின் இந்த தீவிர ரசிகர் அவரை  சந்திப்பாரா?  இல்லையா? என்பதை அறிய அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.