சலுகைகளை அள்ளிய வழங்கிய போதும்….. வாகன தயாரிப்பு நிறுவனங்களை ஏமாற்றிய டிசம்பர் மாதம்….

 

சலுகைகளை அள்ளிய வழங்கிய போதும்….. வாகன தயாரிப்பு நிறுவனங்களை ஏமாற்றிய டிசம்பர் மாதம்….

2019 டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் மொத்தம் 14.05 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இது 2018 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 13 சதவீதத்துக்கு மேல் குறைவாகும்.

வாகன தயாரிப்பு நிறுவனங்களை பொறுத்தவரை 2019ம் ஆண்டு ஒரு இருண்ட ஆண்டாக அமைந்து விட்டது. அந்த ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் வாகன விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் வாகன நிறுவனங்களிடம் கையிருப்பு அதிகரித்தது. இதனையடுத்து முன்னணி நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு, வேலையில்லா நாட்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன. 

வாகனங்கள்

சென்ற ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் வாகன விற்பனை மிகவும் மோசமாகத்தான் இருந்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வாகன நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கிய போதும் அந்த மாதத்தில் விற்பனை மந்தமாக இருந்தது. இது தொடர்பாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது: 

பைக் தயாரிப்பு ஆலை
2019 டிசம்பரில் பைக், ஸ்கூட்டர், கார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்பட மொத்தம் 14.05 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. 2018 டிசம்பர் மாதத்தை காட்டிலும் இது 13.08 சதவீதம் குறைவாகும். 2018 டிசம்பரில் மொத்தம் 16.17 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் பைக் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் மட்டும் மொத்தம் 10.50 லட்சம் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.