சற்று முன்: தைவானில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் படுகாயம்

 

சற்று முன்: தைவானில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் படுகாயம்

தைவான் நாட்டில் துறைமுகம் அருகே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தைவான் நாட்டின் வடகிழக்கே உள்ள துறைமுகம் அருகே நான்பாங்கோ என்னும் வளைவு பாலம் உள்ளது. இந்த பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தின் கீழே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகின. மேலும் படகின் மீது அமர்ந்திருந்த பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயமடைந்து மயங்கினர். 

அதன்பிறகு போர்க்கால  அடிப்படையில் மீட்புப்படையினர் களத்தில் இறங்கி பலத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

taiwan bridge

பாலத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது பாலம் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, டேங்கர் லாரியில் எந்தவித எரிபொருளும் இல்லாததால் தீ விபத்து ஏற்படாமல் போனது. ஆனால், டேங்கர் லாரி சரிந்ததில் மேலும் சில படகுகள் கடுமையாக நசுங்கின. 

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பகுதி பகுதியாக மீட்கும் பணி நடைபெற்று வருவதால், யாரேனும் பலியாகி இருக்கின்றார்களா? என முழுமையாக மீட்பு பணி முடிந்தவுடன் தான் தெரியவரும். 

இன்று காலை பாலம் இடிந்து விழுந்த சில மணி நேரத்திலேயே மீட்புப் பணி துவங்கியது. தற்போதுவரை யாரும் யார் பலியாக வில்லை என கூறப்படுகிறது. பாலம் இடிந்து விழுந்ததால் இரு பகுதிக்கும் இடையே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

பாலம் திடீரென இடிந்து விழுவதற்கான காரணம் என்ன? ஏதேனும் சதித்திட்டம் நடந்துள்ளதா? என்பது முழு வீச்சில் ஆராயப்பட்டு வருகிறது.

-vicky