சற்றுமுன்: வங்கதேசத்தில் நேருக்குநேர் இரு ரயில்கள் மோதிய விபத்து – 16 பேர் பலி!

சற்றுமுன்: வங்கதேசத்தில் நேருக்குநேர் இரு ரயில்கள் மோதிய விபத்து – 16 பேர் பலி!

வங்கதேசத்தில் இரு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வங்கதேசத்தில் உள்ள மாண்டோபாக் ரயில் நிலையத்திலிருந்து சிட்டகாங் ரயில் நிலையம்  வரை  செல்லும் பயணிகள் ரயில் இன்று அதிகாலை புறப்பட்டது. இந்த ரயிலும், டாக்கா நோக்கி வந்துகொண்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலும் அதிகாலை பிரம்மாண்பாரியா அருகே வந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதியது. 

tarin accident

இந்த கோர விபத்தினால் ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து நேரிட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ரயில் பெட்டிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுவரை 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காட்டுப்பகுதிக்குள் இந்த ரயில் விபத்து நேரிட்டு உள்ளதால், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப்பணி வேன்களை உள்ளே எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவும் மீட்புப்பணி தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து வருகின்றனர். ரயிலுக்கு சிக்னல் கொடுத்த ஸ்டேஷன் மாஸ்டர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தகவல்கள் பெறப்படுகிறது. சிக்னல் சரியாக கொடுக்கப்பட்டதாகவும் மற்றொரு ரயில் முறையான சிக்னலை பின்தொடர தவறியதால் இந்த மோதல் விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான முழு காரணங்கள் தற்போது வரை கண்டறியப்படவில்லை.

பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளோர் தெரிவிக்கின்றனர்.