சர் கிரீக் நீரிணை வழியாக குஜராத்துக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம்!

சர் கிரீக் நீரிணை வழியாக குஜராத்துக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம்!

சர் கிரீக் நீரிணை வழியாக பாகிஸ்தான் தனது படகுகள் மூலம் குஜராத்துக்குள் ஊடுருவி தென் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. 

சர் கிரீக் நீரிணை வழியாக பாகிஸ்தான் தனது படகுகள் மூலம் குஜராத்துக்குள் ஊடுருவி தென் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. 

சர் கிரிக் என்பது இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே அமைந்துள்ள 96 கி.மீ நீளம் கொண்ட நீரினால் பிரிக்கப்பட்ட எல்லைக் கோடாகும். ஜம்மு-காஷ்மீரைப் போலவே, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர் க்ரீக் தகராறு நீண்ட காலமாக இருந்து வருகிறது. குஜராத்தில் உள்ள இந்த பிரச்சனைக்குரிய இடத்தில் அடையாளம் தெரியாத படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அது பாகிஸ்தானுடையதாக இருக்கலாம் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அந்த சர் கிரீக் வழியாக பயங்கரவாதிகள் படகுகள் மூலம் குஜராத்துக்குள் வந்து தென் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

attack

இதனால் சர் கிரீக் எல்லைப்பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளன. அங்குவரும் படகுகள் தீவிர கண்காணிப்புக்கு பின் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கான எதிர்வினைகளில் ஒன்றாக இந்த ஊடுருவல் அரங்கேறலாம் என கூறப்படுகிறது.