சர்வாதிகாரமா? ராஜ தந்திரமா? கமல் மற்றும் ரஜினி இடையே முரண்பாடு

 

சர்வாதிகாரமா? ராஜ தந்திரமா? கமல் மற்றும் ரஜினி இடையே முரண்பாடு

1947-ம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு, இந்தத் தன்னாட்சி அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

சர்வாதிகாரமா? ராஜ தந்திரமா? கமல் மற்றும் ரஜினி இடையே முரண்பாடு

1947-ம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு, இந்தத் தன்னாட்சி அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. சட்டவிதி 370-ன்படி இந்திய அரசியல் அமைப்பில், ஜம்மு மற்றும் காஷ்மீருக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிதி மாநில அரசாங்கம் தனக்கேற்ற சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், மாநிலத்தின் தனிப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம். இந்த இரு சட்டப்பிரிவையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கி மசோதா தாக்கல் செய்தது. 

அதேபோல், 35ஏ சட்டவிதியும் உருவாக்கப்பட்டது. இதன்படி, காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மட்டுமே அங்கு சொத்துகள் வாங்க முடியும். வெளிநபர்கள் சொத்துகள் வாங்க முடியாத நிலையும் உள்ளது. 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை மத்திய அரசு சர்வதிகார போக்குடன் அணுகியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியிருக்கிறார். 

ஆனால் நடிகர் ரஜினிகாந்த்,  அமித்ஷாவும், மோடியும் காஷ்மீர் விவகாரத்தை ராஜதந்திரத்துடன் கையாண்டிருப்பதாக பாராட்டியுள்ளார்