‘சர்வம் தாளமயம்’ படத்தின் ட்ராக் லிஸ்ட் இதோ!

 

‘சர்வம் தாளமயம்’ படத்தின் ட்ராக் லிஸ்ட் இதோ!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்தின் பாடல் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்தின் பாடல் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இப்படம் கர்நாடக இசையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

நீண்ட இசைவெளிக்கு பின் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக பீட்டர் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் வாழ்ந்திருப்பதாக படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் 9 பாடல்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் 6 பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • பீட்டர் பீட்டா எது :  அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்பாடலை ஜி.வி.பிரகாஷ், சத்யபிரகாஷ் மற்றும் அர்ஜுன் சாண்டி பாடியுள்ளனர்.
  • மாயா மாயா :  மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய கடைசி பாடலை சின்மயி பாடியுள்ளார்.
  • சர்வம் தாளமயம் :  மதன் கார்க்கி எழுதியுள்ள பாடலை ஹரிச்சரண், அர்ஜுன் சாண்டி ஆகியோர் பாடியுள்ளனர். 
  • வரல்லாமா :  மதன் கார்க்கி பாடியுள்ள இப்பாடலை ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியுள்ளார்.
  • டிங்கு டாங்கு :  அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள பாடலை  பம்பா பாக்யா மற்றும் அந்தோணிதாசன் பாடியுள்ளனர்.
  • ​​​​​​​ஒரு பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார்.

விரைவில் இப்படம் ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.