சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனித ரோபோக்கள்.. புதிய முயற்சியில் ரஷ்யா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனித ரோபோக்கள்.. புதிய முயற்சியில் ரஷ்யா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனித உருவிலான ரோபோக்களை ரஷ்யா அனுப்பியது. இது இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது.

விண்வெளி குறித்த பல சோதனைகளை மற்றும் கண்டுபிடிப்புகளை ரஷ்ய நாடு தொடர்ந்து செய்து கொண்டே வருகிறது. அவற்றில் பல முயற்சிகள் தோல்வியை தழுவி இருந்தாலும், தொடர்ந்து அது குறித்த சோதனையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கிறது. 

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனித உருவிலான ரோபோக்களை ரஷ்யா அனுப்பியது. இது இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது.

russia

விண்வெளி குறித்த பல சோதனைகளை மற்றும் கண்டுபிடிப்புகளை ரஷ்ய நாடு தொடர்ந்து செய்து கொண்டே வருகிறது. அவற்றில் பல முயற்சிகள் தோல்வியை தழுவி இருந்தாலும், தொடர்ந்து அது குறித்த சோதனையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கிறது. 

அதேபோல் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களுக்கு முக்கிய காலங்களில் உதவி செய்வதற்காக மனித உருவிலான ரோபோக்களை ரஷ்யா கண்டுபிடித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. இந்த வகையான ரோபோக்களை இம்மாதம் 22ம் தேதி முதல் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷியா அனுப்பியது. இந்த ரோபோக்கள் சோயூஸ் எம் எஸ் 14 என்ற ஆளில்லா விண்கலம் மூலம் அனுப்பப்பட்டது. 

space

இந்த விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தை இம்மாதம் 24 ஆம் தேதி சென்றடைந்தது. மனித ரோபோக்களை ஏற்றிச்சென்ற விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கையில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. அதன் பிறகு இந்த தொழில்நுட்ப கோளாறுகள் களையப்பட்ட பிறகு மீண்டும் விண்கலமானது விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டு ரோபோக்கள் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த மனித ரோபோக்கள் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்ததாக நாசா உறுதிசெய்தது. 

robot

ஸ்கைப்போர்ட் எப்-850 என்ற பெயர் கொண்ட இந்த ரோபோக்கள் விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்யும் நோக்கத்துடன் ப்ரோக்ராம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013 ஆம் ஆண்டு ஜப்பானும் இதுபோன்ற மனித ரோபோக்களை அனுப்பியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் சென்றதை விட அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இத்தகைய மனித ரோபோக்கள் அனுப்பப்பட்டுள்ளது. இது விண்வெளி வீரர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.