சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

 

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பார்சிலோனா: சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,650) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் தொடங்குகிறது. மேலும் இது பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் ஆகிய இரண்டு விதமான நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்களை பொறுத்தவரை 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 12 எம்.பி (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 20 எம்.பி. செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3320 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நோக்கியா 4.2 சிறப்பம்சங்களை பொறுத்தவரை 5.71 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி மெமரி, 13 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, பேஸ் டிடெக்‌ஷன் மற்றும் பிளாஷ், 8 எம்.பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, விரல்ரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், வைஃபை, வோல்ட்இ, ப்ளூடூத் ஆகியவை இடம்பெற்றுள்ளன.