சர்வதேச பைக் சாம்பியனிடம் பயற்சியெடுக்கும் விஜய் தேவரகொண்டா

 

சர்வதேச பைக் சாம்பியனிடம் பயற்சியெடுக்கும் விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் பைக் ரேஸராக நடிக்கிறார். 

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் பைக் ரேஸராக நடிக்கிறார். 

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது பரத் கம்மா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் ஜூல 26ம் தேதி ரிலீசாகவுள்ளது.

அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தற்போது ‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்குநராக அறிமுகமாகும் ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படம்  4 தென்னிந்திய மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘பேட்ட’ நாயகி மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

vijay

மியூசிக்கில் திரில்லரான இந்த படம் விளையாட்டு அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது.  இதில் திகந்த், வெண்ணிலா கிஷோர், சரண் சக்தி, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஜான் எடதட்டில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.

bike

இந்த நிலையில் இதில் விஜய் தேவரகொண்டா பைக் ரேஸராக நடித்து வருகிறார். இதற்காக பைக் ரேஸ் பந்தயத்தில் சர்வதேச அளவில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியரான ரஜினி கிருஷ்ணனிடம் நடிகர் விஜய் தேவரகொண்டா பயிற்சி எடுத்து வருகிறார். 

மேலும் இதில் மிகப்பெரிய பொருட்செலவில் பைக் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.