சர்வதேச பெண்கள் தினம்; பாஜக-வுக்கு பதிலடி கொடுத்து காங்.,நடத்தும் போட்டி!

 

சர்வதேச பெண்கள் தினம்; பாஜக-வுக்கு பதிலடி கொடுத்து காங்.,நடத்தும் போட்டி!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டி ஒன்றை நடத்துகிறது

புதுதில்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டி ஒன்றை நடத்துகிறது.

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (நாளை) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களின் சிறப்பை போற்றிடும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டி ஒன்றை நடத்துகிறது. “இந்திய அரசியலில் பெண்களின் வரலாறு’ என பெயரிடப்பட்டுள்ள அந்த போட்டியில், 3 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்? முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யார்? இந்திய மாநிலங்களில் முதல் பெண் முதலைமைச்சர் யார்? என கேட்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான பரிசு தொகை ரூ.10,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடைகளை கமென்ட் செய்து, பெண் நண்பர் ஒருவரை டேக் செய்து, அதனை தங்களது பக்கத்தில் பகிர்ந்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

indira gandhi

முன்னதாக, “இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் தமிழகத்திலிருந்து வந்தவர் என நான் பெருமிதம் கொள்கிறேன். நாட்டு மக்களை பெருமை கொள்ள வைத்த வீரமிகு விங் கமாண்டர் அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர்” என பிரதமர் அலுவகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

ஆனால், “இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்திராகாந்தி. ஒருவேளை உங்கள் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பில் (பிரதமர் மோடி அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்) இந்த பகுதியை நீங்கள் தவறவிட்டிருந்தால், நீங்கள் வரலாற்றை தூசி தட்டும் காலம் வந்து விட்டது” என காங்கிரஸ் கட்சி கடுமையாக பதிலளித்திருந்தது.

இந்தியாவின் பிரதமராக இருந்த போது, 1980-82-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.