சர்வதேச பெண்கள் தினத்தில் அற்புதமான பெண்களின் கதை………தடைகளை தகர்த்து சாதனை படைக்கும் டெல்லி என்.சி.ஆர். வாடகை கார் பெண் டிரைவர்கள்….

 

சர்வதேச பெண்கள் தினத்தில் அற்புதமான பெண்களின் கதை………தடைகளை தகர்த்து சாதனை படைக்கும் டெல்லி என்.சி.ஆர். வாடகை கார் பெண் டிரைவர்கள்….

டெல்லி என்.சி.ஆர். பகுதிகளில் பெண் டிரைவர்கள் வாடகை கார்களை இயக்கி வருகின்றனர். பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரேமாதிரியான நிலையை அவர்கள் தகர்த்து உள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளில் இன்று பெண்கள் தடைகளை தகர்த்து சாதித்து வருகின்றனர். இந்த நாளில் டெல்லி என்.சி.ஆர். பகுதியில் வாடகை கார்களை இயக்கி வரும் பெண் டிரைவர்களின் அனுபவங்களை நாம் தெரிந்து கொண்டால் பெண்கள் எவ்வளவு கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

சர்வதேச மகளிர் தினம்

டெல்லி என்.சி.ஆர். பகுதியல் வாடகை கார் ஓட்டும் பெண் டிரைவர் ஆர்த்தி கூறுகையில், பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்காத பகுதியிலிருந்து வந்தவன் நான். எனவே வேலை பார்ப்பது என்பது கனவுதான். வாகனம் ஓட்டுவது எப்போதும் ஆண்களின் வேலையாக கருதப்படுகிறது. இருந்தாலும் பெண் வாடகை கார் டிரைவாக செயல்பட எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவு அளித்தனர். இரவில் வாகனம் ஓட்டும்போது என்னை நானே பெருமையாக உணர்வேன். 

வாடகை கார் ஓட்டும் பெண்

நான் மிகவும் இளவயதில் இருந்தபோது, எனது வாடிக்கையாளர்களுக்கு எனது டிரைவிங் மீது சந்தேகம் இருந்தது. ஆனால் அவர்களை பத்திரமாக அவர்களது வீடுகளில் இறக்கிவிட்டபிறகு அவர்கள் என்னை பெருமைபடுகிறார்கள். அந்த உணர்வு விலைமதிக்க முடியாதது. பெண்களை அவர்களது செய்யும் பணியை பொறுத்தே மதிப்பிட வேண்டும் என தெரிவித்தார். 

பிரதமர் மோடி

பெண் டிரைவர் பிங்கி கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக டிரைவர் பணியில் ஈடுபட்டு வருகிறேன். முன்பு பெண்கள் கார் ஓட்டுவதை பார்க்கும்போது எனக்கும் கார் ஓட்ட வேண்டும் என ஏக்கமாக இருக்கும். ஆனால் என்னுடைய குடும்பத்துக்கு இந்த தொழிலுக்கு நான் போவதை எப்போதுமே விரும்பவில்லை.  அனால் இன்று ஒவ்வொரும் என்னை டிரைவர் சாப் என்று அழைக்கிறார்கள் என்னுடை குடும்பத்தின் நிதி நிலவரம் சரியாக இல்லை இப்போது அவர்களுக்கு என்னால் உதவ முடிகிறது என்பதால் மகிழ்ச்சியாக உணருகிறேன். #she inspires us என்ற நடவடிக்கை வாயிலாக எங்களது கடுமையான பணி, போராட்டங்கள் மற்றும் வெற்றியை, உலகுக்கு சொல்ல பிரதமர் முயற்சி செய்கிறார் என தெரிவித்தார்.

வாடகை கார் ஓட்டும் பெண்

3 குழந்தைகளுக்கு தாயான பெண் டிரைவர் லதா கூறுகையில், ஆரம்பத்தில் வீட்டு வேலைகளையும், டிரைவிங் வேலையையும் பார்ப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் எனது குழந்தைகள் என்னை நம்பினர் மற்றும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். நிதி ரீதியாக யாரையும் சார்ந்து இருக்காமல் இருக்க இது மிகவும் முக்கியம். உங்களை நீங்கள் நம்புங்கள் மற்றும் வேலை பாருங்க என அனைத்து பெண்களிடமும் கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.