சர்வதேச தேர்வில் வெற்றி பெற்றும் நாசா செல்ல முடியாத பெண்! அரசின் உதவி கிடைக்குமா?

சர்வதேச தேர்வில் வெற்றி பெற்றும் நாசா செல்ல முடியாத பெண்! அரசின் உதவி கிடைக்குமா?

புதுக்கோட்டையைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் வெற்றிபெற்று நாசா செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஆனால், அமெரிக்கா சென்று வர பணம் இல்லாததால் நாசா கனவு நிறைவேறுமா என்று கவலையோடு உள்ளார்.

jayalakshmi

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நாசாவுக்கு செல்வதற்காக சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியான go4guru என்ற தேர்வில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் ராசாவுக்கு வருவதற்கான அனுமதி அவருக்கு கிடைத்துள்ளது.
ஆனால் அமெரிக்கா சென்று வர சிறுமிக்கு ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணம் இல்லாத காரணத்தால் சிறுமியால் நாசா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஜெயலட்சுமி கூறுகையில், “என்னுடைய அப்பா முந்திரி விவசாயி. அம்மா மனநலம் சற்று குறைவானவர். எனக்கு விண்வெளி பற்றி சிறுவயது முதல் ஆர்வம். இதனால், எப்போதும் விண்வெளி தொடர்பான தகவலை தேடித்தேடி படிப்பேன். நாசா செல்ல கோ4குரு என்ற போட்டி நடைபெறுவதாக பத்திரிகையில் படித்தேன். அதன் படி என்னுடைய சித்தப்பாவின் மொபைல் போன் மூலமாக அந்த தேர்வில் பங்கேற்று வெற்றியும் பெற்றேன். 

nasa

இப்போது நாசாவுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அமெரிக்கா சென்று வரை 1.7 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு என்னுடைய குடும்பம் வசதியானது இல்லை. இதனால், அரசு, தொண்டு நிறுவனங்கள் உதவினால் நாசா சென்று, அங்கு நடைபெறும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன்” என்றார்.