சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’!

 

சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’!

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

சென்னை: ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

‘காலா’ இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

pariyerumperumal

இந்நிலையில் இப்படம் கோவாவில் நடைபெறவுள்ள 49வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இதனை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் ஆணவக் கொலைகள் விபத்துக்களாகவும், தற்கொலைகளாகவும் சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுவதை வன்முறை இல்லாமல் கூறப்பட்டுள்ளது. இது விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் மட்டுமல்லாமல் மக்களிடமும், திரை பிரபலங்களிடமும் பாராட்டுக்களை குவித்தது.