சர்வதேச டெஸ்ட் அரங்கில்.. ஜடேஜா புதிய சாதனை!!

சர்வதேச டெஸ்ட் அரங்கில்.. ஜடேஜா புதிய சாதனை!!

சர்வதேச டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார் சுழல் பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா  இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் இருவரின் அபாரமாக ஆடியதால், நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியாக, 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 

jadeja

போட்டி துவங்குவதற்கு முன்பாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 43 டெஸ்ட் போட்டிகளில் 198 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் மிகக் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எட்டிய இடது கை பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.

அதேபோல, தென்னாபிரிக்க அணிக்கு பந்துவீசிய ஜடேஜா, இரண்டாம் நாளில் டானி பியட் விக்கெட்டை வீழ்த்தி 199 விக்கெட்டுகளை பதிவு செய்தார். மூன்றாம் நாள் ஆட்டத்தில் துவக்க வீரர் எல்கரின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் அருகில் 200வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர்கள் பட்டியல்:

1.ரவீந்திர ஜடேஜா – இந்தியா – 44 போட்டிகள் 

2. ரங்கனா ஹெரத் – இலங்கை – 47 போட்டிகள்

3. மிட்செல் ஜான்சன் – ஆஸ்திரேலியா – 49 போட்டிகள் 

4. மிட்செல் ஸ்டார்க் – ஆஸ்திரேலியா – 50 போட்டிகள்

5. வாசிம் அக்ரம் – பாகிஸ்தான் – 51 போட்டிகள்

-vicky