சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த மித்தாலி ராஜ்..!

சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த மித்தாலி ராஜ்..!

சர்வதேச பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 20 வருடங்களை கடந்து ஆடிவரும் வீரர் என்ற சாதனையை மித்தாலி ராஜ் படைத்திருக்கிறார்.

பிரபல கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் 1999 ஆம் ஆண்டு சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியில்  இடம்பெற்று அயர்லாந்துக்கு எதிராக முதல் கிரிக்கெட் போட்டியை ஆடினார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்திருந்தாலும் தமிழகத்தை பூர்விகமாக குடும்பத்தை சேர்ந்தவர். 

mithaliraj

பத்து வயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தனது 14வது வயதில் 1997 ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு செல்லவிருந்த பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் முதல்கட்ட பட்டியலில் இடம் பெற்றார். பின்னர் இறுதியாக தயார் செய்யப்பட்ட பட்டியலில் இவர் பெயர் நீக்கப்பட்டது. இருப்பினும், 1999 ஆம் ஆண்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று தனது முதல் போட்டியை ஆடினார். 

இந்திய அணிக்காக டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வந்த இவர், அண்மையில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மித்தாலி ராஜ் இதுவரை 203 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார். இதன் மூலம் 6 ஆயிரத்து 731 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஏழு சதங்களும் 52 அதை அரை சதங்களும் அடங்கும். பெண்களுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இதுவரை 200 ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு வீராங்கனையும் ஆடியதில்லை. இந்த சாதனையை முதன் முதலில் மித்தாலிராஜ் படைத்தார். பின்னர், ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எந்த ஒரு வீராங்கனையும் கடந்ததில்லை இதையும் முதன்முதலாக இவர் நிகழ்த்தி காட்டினார். 

mithalairaj

தற்போது மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் மித்தாலி ராஜ். அதாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 20 வருடங்கள் எந்த ஒரு வீராங்கனையும் ஆடியதில்லை. இதனை முதன்முதலாக நிகழ்த்தியுள்ளார் மித்தாலி ராஜ். இவர் 20 ஆண்டுகள் 106 நாட்கள் கடந்து ஆடி வருகிறார்.  

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 22 ஆண்டுகள் 91 நாட்கள் ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார். இதற்கு அடுத்த இடத்தில் ஜெயசூர்யா 21 ஆண்டுகள் 120 நாட்கள் ஆடியிருக்கிறார்.

இவர்கள் மூவர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 வருடங்கள் கடந்து ஆடியுள்ள வீரர்கள் ஆவர்.

-vicky