சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு

லண்டன்: இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலய்ஸ்டர் குக் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தற்போது 33 வயது ஆகிறது.

இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்கள் அடித்துள்ள குக், 92 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள் விளாசியுள்ளார். இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அலய்ஸ்டர் குக் திகழ்ந்து வந்தார். ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.

சமீபகாலமாக ஃபார்ம் இன்றி தவித்து வரும் குக், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். இதனால், இங்கிலாந்து அணியில் அவரது இடம் கேள்விக்குள்ளாகி உள்ளது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது முடிவை குக் அறிவித்துள்ளார்.