சர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டில் 51வது இடத்துக்கு பின் தங்கிய இந்தியா….. மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு…..

 

சர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டில் 51வது இடத்துக்கு பின் தங்கிய இந்தியா….. மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு…..

சர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டு பட்டியலில் 10 இடங்கள் சரிந்து 51வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதே அளவில் ஜனநாயக குறியீட்டை ஆண்டுதோறும் பொருளாதார புலனாய்வு பிரிவு வெளியிட்டு வருகிறது. நாடுகளின் தேர்தல் நடைமுறை, பன்மைவாதம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் குடிமக்களின் சுதந்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து ஜனநாய குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்தியா

2019ம் ஆண்டுக்கான ஜனநாயக குறியீடு பட்டியலில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 இடத்தில் பின்தங்கியுள்ளது. 2018ல் ஜனநாயக குறியீட்டில் 7.23 மதிப்பெண் பெற்று இருந்த நம் நாடு, 2019ல் 6.90 மதிப்பெண்களே பெற்றுள்ளது. நாட்டில் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதால்தான் சர்வதேச ஜனநாயக குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

மக்கள் போராட்டம்

சர்வதேச ஜனநாய குறியீட்டு பட்டியலில், நமது பங்காளி நாடான பாகிஸ்தான் 4.25 புள்ளிகளுடன் 108வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் நெருங்கி நட்பு நாடான சீனா 2.26 மதிப்பெண்களை மட்டுமே பெற்று 153 இடத்தில் உள்ளது. இலங்கை 6.27 புள்ளிகளுடன் 69 இடத்தில் உள்ளது. அதேசமயம் ஜனநாயக குறியீட்டு பட்டியலில் முதலிடத்தில் நார்வே உள்ளது. அடுத்து ஐஸ்லாந்து, சுவீடன் நாடுகள் முறையே 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன.