சர்தார் வல்லபாய் படேலின் 114 ஆவது பிறந்தநாள் : 597 அடி உயரமுள்ள படேல் சிலைக்கு மோடி மலர் தூவி மரியாதை..!

 

சர்தார் வல்லபாய் படேலின் 114 ஆவது பிறந்தநாள் : 597 அடி உயரமுள்ள படேல் சிலைக்கு மோடி மலர் தூவி மரியாதை..!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் படேலை போற்றும் வகையில், மத்திய அரசு குஜராத் நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிலையை நிறுவியது.

ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பிறகு, சிதைந்து கிடந்த 500 மேற்பட்ட சமஸ்தான்களை ஒன்றிணைத்து இந்தியாவை உருவாக்கிய பெருமையைக் கொண்ட சர்தார் வல்லபாய் படேலுக்கு இன்று 144 ஆவது பிறந்தநாள். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் படேலை போற்றும் வகையில், மத்திய அரசு குஜராத் நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிலையை நிறுவியது. மேலும், சர்தாரின் பிறந்தநாளை ஆண்டு தோறும் தேசிய ஒற்றுமை தினமாகவும் கொண்டாடி வருகிறது. 

Patel statue

சர்தாரின் பிறந்தநாளையொட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நர்மதையில் உள்ள படேலின் சிலைக்கு இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்பகுதியில் நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார். 

Narendra modi

அதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள படேலின் உருவச்சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்குக் குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அதன் பின்பு, தேசிய ஒற்றுமை தினத்தைப் போற்றும் விதமாக நடக்கவிருந்த ஒற்றுமை ஓட்டத்தை அமித்ஷா கொடியசைத்துத் துவக்கிவைத்துள்ளார்.