சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்குவதற்கான ஒரு நடவடிக்கைதான் 370 நீக்கம்…. சுதந்திர தின உரையில் மோடி பேச்சு…

 

சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்குவதற்கான ஒரு நடவடிக்கைதான் 370 நீக்கம்…. சுதந்திர தின உரையில் மோடி பேச்சு…

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்குவதற்கான ஒரு நடவடிக்கைதான் சட்டப்பிரிவு 370 நீக்கம் என தனது உரையில் கூறியுள்ளார்.

நம் இந்திய திருநாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து 1947 ஆகஸ்ட் 15ம் தேதியன்று சுதந்திரம் அடைந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது மரபு. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றினார். பின் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.

செங்கோட்டையில் பிரதமர் மோடி

செங்கோட்டைக்கு வருவதற்கு முன்பாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின் அங்கிருந்து செங்கோட்டைக்கு வந்தார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின் செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பின் தற்போது நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார். 

பிரதமர் மோடி உரை

மோடி சுதந்திர தின உரையில், சர்தார் வல்லபாய் படேலின கனவை நனவாக்கும் ஒரு நடவடிக்கைதான் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் என்று கூறினார். டில்லியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.