சர்ச், மசூதியை சீரமைக்க ரூ.10 கோடி… அதிர்ச்சியில் இந்து அமைப்புக்கள்!

சர்ச், மசூதியை சீரமைக்க ரூ.10 கோடி… அதிர்ச்சியில் இந்து அமைப்புக்கள்!

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் பழுது பார்ப்பு சீரமைப்பு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது தீவிர வலதுசாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் பழுது பார்ப்பு சீரமைப்பு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது தீவிர வலதுசாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

q

ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், “தமிழ்நாட்டில் 7,233 ஏக்கர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் கோவில் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதி ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படுகிறது. மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுவந்தது. அதுவும் ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்” என்று கூறினார்.

budget

இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்கள் சீரமைக்க வழங்கப்படும் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது இந்து அமைப்புகளை எரிச்சலடைய செய்துள்ளது. இது தொடர்பாக சிலர் தங்கள் அதிருப்தியை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.