சர்ச்சையில் சிக்கிய விஜயின் குட்டிக்கதை! 

 

சர்ச்சையில் சிக்கிய விஜயின் குட்டிக்கதை! 

அண்மையில் நடிகர் விஜய் மற்றும் அட்லி நடித்த பிகில் பட இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. எந்த விழா நடைபெற்றாலும், அதில் நடிகர் விஜய் பேசும்போது குட்டிக்கதை சொல்வது வழக்கம்.

அண்மையில் நடிகர் விஜய் மற்றும் அட்லி நடித்த பிகில் பட இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. எந்த விழா நடைபெற்றாலும், அதில் நடிகர் விஜய் பேசும்போது குட்டிக்கதை சொல்வது வழக்கம். அதேபோன்று பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய குட்டிக்கதை, பட்டிமன்ற பெண் பேச்சாளர் ஒருவர் மேடையில் கூறிய கதை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் பேசும் போது “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல். பயந்துவிடாதீர்கள். இது திருக்குறள் தான். பூக்கடையில் ஒருத்தன் வேலை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறான். திடீரென்று அவனுக்கு அங்கு வேலை போய்விட்டது. அவன் தெரிந்தவன் என்பதால், அவனை பட்டாசுக் கடையில் வேலைக்கு உட்கார வைத்துவிடுகிறார்கள். ஒரு வெடி கூட விற்கவில்லை. என்னடா என்று பார்த்தால், 10 நிமிடத்துக்கு ஒருமுறை வாளியில் தண்ணீர் பிடித்து பட்டாசு மீது தெளித்துக் கொண்டிருந்தான். அது தொழில் பக்தி. அவனை விட்டுப் போகவில்லை” என பேசினார். 

திருக்குறள்

இது பட்டிமன்ற பெண் பேச்சாளர் கவிதா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் ஆரணியில் நடந்த பட்டிமன்ற மேடையில் பேசிய திருக்குறளையும், குட்டிக்கதையையும் ஒரு வரிக்கூட மாற்றாமல் அதே மாடுலேஷேனில் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கதையைதான் முன்பு திருடுவீர்கள் இப்போது டையலாக்கையும் திருட ஆரம்பித்துவிட்டீர்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். 

இதுகுறித்து பட்டிமன்ற பேச்சாளர் கவிதாவிடம் கேட்டபோது, “ நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை. தன்னிடம் கேட்டிருந்தால் இதைவிட பிரமாதமான குட்டிக்கதை ஒன்றை  விஜய்க்கு எழுதிக்கொடுத்திருப்பேன். பல வருடங்களாக பட்டிமன்ற பேச்சாளர்கள் பலரது குட்டிக்கதைகளையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசுவது வழக்கமான ஒன்று தான். திருக்குறளை நான் எழுதவில்லை… அதேபோல் இந்த குட்டிக்கதையையும் நான் எழுத வில்லை… விஜய் வேறு எங்கேயாவது இந்தக் கதையைக் கேட்டிருக்கலாம். அது பரவலாகச் சொல்லப் படுகிற கதை தான். ஆகையால் பேசியிருக்கலாம். புத்தகங்களில் வாசித்துக் கூடப் பேசியிருக்கலாம். ஒரு சேர அமைந்தது தற்செயலான நிகழ்வு தான் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.