சர்ச்சைக்குள்ளான ரஃபேல் போர் விமானத்தை ரூ.59,000 கோடிக்கு இந்தியா வாங்குவது ஏன்? இப்ப இது தேவையா?

சர்ச்சைக்குள்ளான ரஃபேல் போர் விமானத்தை ரூ.59,000 கோடிக்கு இந்தியா வாங்குவது ஏன்? இப்ப இது தேவையா?

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் ரூ.59,000 கோடியில் ரஃபேல் போர் விமானத்தை இந்தியா வாங்கியுள்ளது. இந்த விமானங்களின் முதல் தொகுதி, ஹரியானாவிலுள்ள ம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

ரஃபேல் போன் விமானங்களின் விலை மற்றும் அந்த விமானத்துக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் ஒப்பந்தம் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை முன்வைத்து மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  ஊழல் குற்றச்சாட்டை சுமத்தின. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளையெல்லாம் புறம்தள்ளிய மத்திய அரசு விமானப்படைக்கென ரஃபேல் போர் விமானத்தை வாங்கி பலத்தை கூட்டியுள்ளது. 

rafale fighter jet

ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்:

  • ரஃபேல் போர் விமானத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸால்ட் ஏவியேசன் நிறுவனம் தயாரித்துள்ளது. 
  • அதிகபட்சமாக மணிக்கு 1,389 கிலோமீட்டர் பறக்கும் திறன் கொண்டது. 
  • இதன் நீளம் 15.3 மீட்டர், இறக்கையின் நீளம் 10.8 மீட்டர், உயரம் 5.3 மீட்டர் 
  • ரஃபேல் போர் விமானம் சாதரணமாக இருக்கும்போது 10,000 கிலோ எடைக்கொண்டது. 
  • விமானத்தில் எரிபொருளும், ஆயுதங்களும் நிரப்பிய பின்னர் 24, 500 கிலோவை எட்டும்.
  • ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் பறக்கும் திறன் கொண்டது ரஃபேல் விமானம் 
  • இதில் துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும அதிநவீன ஆயுதங்கள் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும்.
     
  • இதனால் எதிரிநாடுகளான பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விமானமாக ரஃபேல் பார்க்கப்படுகிறது.