சர்ச்சைக்குரிய போஸ்டர்: பிகார் நீதிமன்றத்தில் ராகுல் மீது வழக்குப்பதிவு

 

சர்ச்சைக்குரிய போஸ்டர்: பிகார் நீதிமன்றத்தில் ராகுல் மீது வழக்குப்பதிவு

காங்கிரஸ் தலைவர் ராகுலை ராமனாக சித்தரித்து ஒட்டப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர் விவகாரத்தில் பிகார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பாட்னா: காங்கிரஸ் தலைவர் ராகுலை ராமனாக சித்தரித்து ஒட்டப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர் விவகாரத்தில் பிகார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ‘ஜன் ஆகன்ஷா பேரணி’ நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தியை ராமர் போல் சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.

இதுகுறித்து இந்த போஸ்டரை அச்சிட்டு ஒட்டிய காங்கிரஸ் நிர்வாகி விஜய் குமார் சிங், “ராமராய் இருக்க அத்தனை தகுதிகளும் உடையவர் ராகுல் காந்தி, ராமர் பெயரை வைத்து அரசியல் செய்பவர்தான் நரேந்திர மோடி. காங்கிரஸ் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறது. அயோத்தி பிரச்சனையை தீர்க்க காங்கிரஸ் அரசால்தான் முடியும்” என்றார்.

இந்நிலையில், ராகுலை ராமனாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது என கூறி, பாட்னா நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், பிகார் மாநில தலைவர் மதன் மோகன் ஜா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.