சர்க்கரை வள்ளிக்கிழங்குகளுடன் பதுக்கிவைத்திருந்த 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்!

 

 சர்க்கரை வள்ளிக்கிழங்குகளுடன் பதுக்கிவைத்திருந்த 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்!

தீவிர சோதனையில் ஈடுபட்ட  போது  சர்க்கரை வள்ளி கிழங்குடன் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.  

சென்னை: சென்னையை அடுத்த புழலில்  45 லட்சம் மதிப்பிலான 210 கிலோ கிராம் 97 கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் புழல் அடுத்த ரெட்டேரி எம்ஜிஆர் நகரில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்ட  போது  சர்க்கரை வள்ளி கிழங்குடன் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.  

ttn

இதுகுறித்து விசாரணையில் ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த பொட்டலங்கள் சென்னை முழுவதும் விநியோகிக்க வைக்க பட்டிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கெனவே போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால்  கடந்த ஓராண்டாகத் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ttn

இதையடுத்து கைதான நபரிடம்  இந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து  கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அம்பத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.