சர்க்கரை நோய், மூட்டு வலியால் அவதிப்பட்ட தாயை அடித்துக் கொன்ற மகன்! – மகாராஷ்டிராவில் பயங்கரம்

சர்க்கரை நோய், மூட்டு வலியால் அவதிப்பட்ட தாயை அடித்துக் கொன்ற மகன்! – மகாராஷ்டிராவில் பயங்கரம்

தாராபூர் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்திராவதி (62). இவரது கணவர் அணு மின்நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடன் ஒரு மகளும் ஜெய்பிரகாஷ் தோபி என்ற மகனும் ஒன்றாக வசித்துவந்தனர். இவர்களது மூத்த மகன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

மகாராஷ்டிராவில் மூட்டுவலி, சர்க்கரை நோயால் அவதிப்பட்ட தாயை அவரது மகன் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபூர் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்திராவதி (62). இவரது கணவர் அணு மின்நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடன் ஒரு மகளும் ஜெய்பிரகாஷ் தோபி என்ற மகனும் ஒன்றாக வசித்துவந்தனர். இவர்களது மூத்த மகன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
சந்திராவதியின் கணவர் மற்றும் மகள் வெளியே சென்றிருந்தபோது, சந்திராவதி உணவு சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது, ஜெயப்பிரகாஷ் இரும்பு கம்பியால் சந்திராவதியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சந்திராவதியின் மூத்த மகன் வீட்டுக்கு வந்து சந்திராவதியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். கொலைசெய்த ஜெயப்பிரகாஷை கைது செய்தனர். அவர், “என் அம்மாவுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளது. மூட்டு வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். தற்போது கண் புரைக்கு அறுவைசிகிச்சை வேறு செய்தோம். இதனால், அவர் மிகவும் வேதனையாக இருந்தார். அதனால், அவரை கொலை செய்து, அவருக்கு நிம்மதி கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.
மூத்த மகனிடம் நடத்திய விசாரணையில், ஜெயப்பிரகாஷுக்கு மனநிலை சரியில்லை என்றும் அதனால், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
ஜெயப்பிரகாஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஜனவரி 2ம் தேதி வரையிலும் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.