சர்கார் விவகாரம்: பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக: அதிமுகவை கலாய்த்த நடிகை குஷ்பூ
சர்கார் படத்திற்கு ஆதரவாக திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்புவும் சர்காருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
சென்னை: சர்கார் படத்திற்கு ஆதரவாக திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்பூவும் சர்காருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளி விருந்தாகக் கடந்த 6ம் தேதி ரிலீசானது. இந்தப் படம் வருவதற்கு முன்பாகவே கதை திருட்டு விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Politics and power is being clearly misused by those who are forced upon the people of TN..arm twisting,threatening,creating fear psychosis is not new..we saw it earlier with @actorvijay films n now..what is making these law makers so unsecured?? #BuildingStrongBasementWeakAIADMK
— khushbusundar..and it’s NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) November 8, 2018
இதையடுத்து படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாகப் படக்குழுவினர் ஒப்புக்கொண்டு நீக்கியுள்ளது. எனினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து கூறி வரும் நிலையில் நடிகை குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசு, மக்கள் மீது தனது அதிகாரத்தைத் திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்கப் பார்ப்பது எல்லாம் புதிதல்ல, இதையெல்லாம் ஏற்கனவே பல விஜய் படங்களில் பார்த்துவிட்டோம். அரசியல்வாதிகள் ஏன் இந்த விவகாரத்தை இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டார்கள்? பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக’ என்று பதிவிட்டுள்ளார்.