சர்கார் வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனு

 

சர்கார் வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனு

‘சர்கார்’ திரைப்படம் விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை: ‘சர்கார்’ திரைப்படம் விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

சர்கார் திரைப்படத்தின் தமிழக அரசின் முத்திரை பதித்த இலவச பொருட்களை தீயில் போட்டு எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று சர்ச்சையை கிளப்பின. தமிழகம் முழுவதும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி போராட்டங்கள் வெடித்ததையடுத்து, குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டு திரைப்படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அரசின் கொள்கையை விமர்சித்ததாக சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் மனுவை பிற்பகலில் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.