சர்கார் பாடலுக்கு அதிரடியாக ஆடிய பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ!

 

சர்கார் பாடலுக்கு அதிரடியாக ஆடிய பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ!

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு நடிகை அதுல்யா ரவி நடனமாடியுள்ள வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை: சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு நடிகை அதுல்யா ரவி நடனமாடியுள்ள  வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் ஹிட்டாகி உள்ளது. 

இந்நிலையில் சர்கார்  படத்தில் இடம்பெற்ற ஓஎம்ஜி பொண்ணு என்ற பாடலுக்கு நடிகை அதுல்யா ரவி நடனமாடியிருந்தார். அந்த வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து டிரெண்டாக்கி  வருவது குறிப்பிடத்தக்கது.