சர்கார் சர்ப்ரைஸ்: ஒரே டேக்கில் நடனம் ஆடி அசத்திய விஜய்: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் வெளியிட்ட வீடியோ!

 

சர்கார் சர்ப்ரைஸ்: ஒரே டேக்கில் நடனம் ஆடி அசத்திய விஜய்: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் வெளியிட்ட வீடியோ!

நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் ஒரு பாடலில் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக நடன இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் ஒரு பாடலில் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக நடன இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் படத்தில் நடன இயக்குநராக பணிபுரிந்த ஸ்ரீதர் தனது அனுபவங்களை பகிரும் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் , ‘விஜய் நடனம் ஆடும் பாடல் என்றாலே அதில் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பேன். அதேபோல் இந்தப் படத்தின் ஒரு பாடலிலும் சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன். அது ரசிகர்களை ரசிக்க வைக்கும். பாடலில் எவ்வளவு நீளமான ஸ்டெப்ஸ் வைத்தாலும் அதை ஒரே டேக்கில் நடித்து முடித்து விடுவார் விஜய். பல்லவி முழுவதையும் ஒரே டேக்கில் ஆடுவது விஜய்-ஐ தவிர யாராலும் முடியாத ஒன்று’ என்று கூறியுள்ளார்.

 

‘பாடலில் சின்னச் சின்ன மாற்றம் செய்ய விரும்பி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டேன். தான் ஒரு பெரிய இசையமைப்பாளர் என்று பார்க்காமல் நான் நினைத்தபடி மாற்றிக் கொடுத்தார். இந்தப் படத்தின் பாடலுக்காக நானும் எனது குழுவும் கடினமாக உழைத்திருக்கிறோம். இவை அனைத்தும் ரசிகர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்’ என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.