சர்கார் சர்ச்சை: ஜெயலலிதா கேரக்டரில் வரலட்சுமி? அதிமுகவில் சலசலப்பு!

 

சர்கார் சர்ச்சை:  ஜெயலலிதா கேரக்டரில் வரலட்சுமி? அதிமுகவில் சலசலப்பு!

சர்கார்  படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமியின் கதாபாத்திரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரம் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சர்கார்  படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமியின் கதாபாத்திரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரம் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதில் வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயர் கோமலவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமலவள்ளியின் கதாபாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் அதிமுக அரசை விஜய் கடுமையாக சாடியுள்ளார். அதே போல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமலவள்ளி என்பதால், தமிழக அரசியலில்  சர்கார் திரைப்படம் சலசலப்பை  ஏற்படுத்தியுள்ளது.