‘சர்கார்’ கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

 

‘சர்கார்’ கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

‘சர்கார்’ திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பது உறுதியானால் திரையரங்க உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்ற அதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: ‘சர்கார்’ திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பது உறுதியானால் திரையரங்க உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்ற அதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படை தீபாவளி பண்டியையொட்டி வரும் நவ.6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

சர்கார் திரைப்படத்திற்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அரசு நிர்ணயித்த விலைக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், மதுரையில் 5 திரையரங்குகளில் சர்கார் திரைப்படம் ரிலீசாகிறது. சட்டப்படி மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ரூ.50 முதல் ரூ. 150 வரையும், மற்ற திரையரங்குகளில் ரூ.40 முதல் நூறு ரூபாய் வரையும், ஏசி திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.80 வரையும் கட்டணம் வசூலிக்கலாம். இந்த அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணம் தொடர்பாக 2017- ம் ஆண்டில் உள்துறை செயலாளர் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், காலை 7 முதல் 8 மணி வரை படக்காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, ‘சர்கார்’ திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பது உறுதியானால் திரையரங்க உரிமத்தை ரத்து செய்யலாம்.  சர்கார் படம் வெளியாகவுள்ள திரையரங்குகளில் கட்டண வசூல் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.