சர்கார் கதை திருட்டு: விஜய்யுடன் யார் பணியாற்றினாலும் பிரச்சினை தான்: ஏ.ஆர்.முருகதாஸ் குமுறல்!

 

சர்கார் கதை திருட்டு: விஜய்யுடன் யார் பணியாற்றினாலும் பிரச்சினை தான்: ஏ.ஆர்.முருகதாஸ் குமுறல்!

சர்கார் கதை திருடப்பட்டதாக சொல்வதில் உண்மையில்லை என்று தனது தரப்பு விளக்கத்தைப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

சென்னை: நடிகர் விஜய்யுடன் அட்லி உள்ளிட்ட எந்த இயக்குநர் பணியாற்றினாலும் பிரச்சினை வருவது இயல்புதான் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’  திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவ.6ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், வருண் ராஜேந்திரன் என்பவர் ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடையது எனத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை விசாரித்த எழுத்தாளர்கள் சங்க தலைவர் கே.பாக்யராஜ் தலைமையிலான குழு வருணின் ‘செங்கோல்’ படத்தின் கதையும், முருகதாஸின் ‘சர்கார்’ படத்தின் கதையும் ஒன்று தான் என அறிக்கை வெளியிட்டது.

sarkar

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் முருகதாஸ் முதன்முறையாக இணையதள ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள அவர், ‘நடிகர் விஜய்யுடன் அட்லி உள்ளிட்ட எந்த இயக்குநர் பணியாற்றினாலும் பிரச்சினை வருவது இயல்புதான். பாக்யராஜ் சொல்வது ஒருதலைபட்சமாக இருக்கிறது. என்னுடைய முழுக் கதையை அவர்கள் படிக்கவில்லை. இந்த விவகாரத்தில் என்னுடைய முழுக்கதையை நான் பாக்யராஜிடம் சமர்ப்பிக்கவில்லை. என்னுடைய மூலக் கதையை மட்டுமே அவர்கள் படித்திருக்கிறார்கள். ‘செங்கோல்’ முழுக்கதையைப் படித்தது போல் என்னுடைய முழுக்கதையையும் படித்திருக்க வேண்டும் அல்லவா? இவ்வளவு பெரிய தண்டனையை ஏன் கொடுத்தீர்கள். நான் என்ன செய்தேன். சமகால அரசியலையும் முதல்வர் இறந்ததற்குப் பின்னால் நடந்த அரசியலையும் மையப்படுத்தி படம் எடுத்துள்ளேன். இதை எப்படி 2007-ம் ஆண்டு செங்கோல் கதையில் எழுத முடியும்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

sarkar1

‘செங்கோல் கதையில் சிவாஜி கணேசனின் வாக்கைக் கள்ள ஓட்டாகப் போடுகின்றனர். சர்கார் படத்தில் சுந்தர் பிச்சை போன்று வெளிநாட்டிலிருக்கும் ஒருவரது வாக்கைக் கள்ள ஓட்டாகப் போடுகின்றனர். இந்த ஒரு சம்பவத்தின் ஒற்றுமை மட்டுமே எப்படிக் கதை திருடப்பட்டுவிட்டது என்று சொல்வதில் சரியாக இருக்கும்.
இந்தக் கதையை சொந்தம் கொண்டாடும் வருண் என்ற ராஜேந்திரனை நான் இதுவரை நேரில் பார்த்ததும் இல்லை இணைந்து பணியாற்றியதுமில்லை. அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஸ்டில் கேமிராமேனிடம் சொல்லி இந்தக் கதையை நான் திருடிவிட்டதாக சொல்கிறார்கள். ஒரு ஸ்டில்கேமிராமேனிடம் யாராவது கதை கேட்பார்களா?’ என்று கேட்டுள்ளார்.

sarkar2

‘இந்த விவகாரத்தில் ஒரு புகைப்படக் கலைஞரின் மூலம் தான் திருடப்பட்டதாகப் புகார் சொல்லப்படுகிறது. அப்படியெனில் பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் ஸ்டில்ஸ் விஜய்-ஐ ஏன் நேரில் அழைத்து விசாரிக்கவில்லை. இதற்கு பாக்யாராஜ் மற்றும் குழுவினர் எனக்குப் பதிலளிக்க வேண்டும். கதை தன்னுடையது என்று கூறும் வருண் ராஜேந்திரன் பாக்யராஜ் உடன் பணியாற்றியவர் அதனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. பாக்யராஜ் எழுதி இயக்கிய சின்னவீடு  படத்தின் கதையும், கலைமணி எழுதி மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் கதையும் கிட்டதட்ட ஒன்றேதான்.  சின்ன வீடு படத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு கோபுரங்கள் சாய்வதில்லை படம் வெளியானது. அப்படியானால் நீங்களும் காப்பி அடித்தீர்களா?. நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

sarkar3

இது முழுக்க முழுக்க எனது உழைப்பு, எனது குழுவின் உழைப்பு, இதுபோன்ற பிரச்சினைகளால் நான் சினிமாவிலிருந்தே வெளியேறிவிடுவதாகவும் முடிவெடுத்தேன். எனது நண்பர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.  இந்த விவகாரத்தை நடிகர் விஜய்யிடம் கொண்டு செல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிரச்சினைகள் வரும்போது யாரிடமும் உதவிக் கேட்க மாட்டேன். அவரை தர்மசங்கடப்படுத்தக் கூடாது. இந்த விஷயத்தில் விஜய்யிடம் நான் எதுவும் பேசவில்லை. அவர் மட்டுமல்ல யாரிடமும் நான் எனது பிரச்சினையை சொல்லவில்லை. இந்தப் பிரச்சினையை நானும் எனது குழுவும் எதிர்கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.