சர்காரை பார்த்து பயந்ததா தமிழக சர்கார்?: கோமளவள்ளி alias வரலக்ஷ்மி கேள்வி!

 

சர்காரை பார்த்து பயந்ததா தமிழக சர்கார்?: கோமளவள்ளி alias வரலக்ஷ்மி கேள்வி!

சர்கார் திரைப்படத்தை பார்த்து தமிழக அரசு அஞ்சுகிறதா என நடிகை வரலக்ஷ்மி கிண்டலடித்துள்ளார்.

சென்னை: சர்கார் திரைப்படத்தை பார்த்து தமிழக அரசு அஞ்சுகிறதா என நடிகை வரலக்ஷ்மி கிண்டலடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளை கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், வில்லியாக நடித்துள்ள வரலக்ஷ்மியின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவள்ளி என்ற பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்த நிலையில், குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதாக சர்கார் படக்குழு ஒப்புக் கொண்டது. இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு பிற்பகலில் இருந்து காட்சிகள் திரையிடப்படுகிறது.

இந்நிலையில், கோமளவள்ளியாக நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேலியாக தமிழக அரசை விமர்சித்து ட்வீட்டியுள்ளார். அதில், ஒரு படத்தை பார்த்து அஞ்சும் அளவிற்கு தமிழக அரசு வலுவிழந்து இருக்கிறதா? உங்களது பெயரை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள், எதை செய்யக் கூடாதோ அதையே செய்கிறீர்கள். வன்முறையை தூண்டும் விதமான முட்டாள் தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலுக்கான சுதந்திரத்தை பறிக்காதீர்கள்’ என தெரிவித்துள்ளார்.