சர்காருக்கு ரெட் கார்ட் போட விஷாலிடம் மனு!

 

சர்காருக்கு ரெட் கார்ட் போட விஷாலிடம் மனு!

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு ரெட் கார்ட் தடை கோரி குறும்பட இயக்குநர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் மனு வழங்கியுள்ளார்.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு ரெட் கார்ட் தடை கோரி குறும்பட இயக்குநர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் மனு வழங்கியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’சர்கார்’ திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்கார் படத்துக்கு கூடுதலாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

முருகதாஸ்-விஜய் கூட்டணியில் வெளியான ‘கத்தி’ படத்தின் கதைக்கு உரிமை கோரி குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், முருகதாஸ்-விஜய் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் அன்பு ராஜசேகர் மனு கொடுத்துள்ளார்.

sarkar

இது தொடப்ரான அவரது மனுவில், விவசாய பிரச்னை மற்றும் தற்கொலையை மையமாக வைத்து தான் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதையை திருடி இயக்குநர் முருகதாஸ் ‘கத்தி’ படத்தை இயக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

sarkar

சுமார் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கினால் தனது ஒட்டுமொத்த வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அன்பு ராஜசேகர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ‘சர்கார்’ படத்தை வெளியிட ரெட் கார்ட் தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

sarkar

‘சர்கார்’ படத்தின் கதை திருட்டு தொடர்பான வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், புதிதாக ‘கத்தி’ பட விவகாரம் எழுந்துள்ளது ‘சர்கார்’ படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.