சர்காரில் இடம்பெற்றிருந்த சர்ச்சை காட்சிகளை நீக்கியது சென்சார்!

 

சர்காரில் இடம்பெற்றிருந்த சர்ச்சை காட்சிகளை நீக்கியது சென்சார்!

சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கதை திருட்டு சர்ச்சைகளை கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களை பெற்றது.

வில்லியாக நடித்துள்ள வரலக்ஷ்மியின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவள்ளி என்ற ஜெயலலிதாவின் இயற்பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆகவே, அப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் ஒப்புதல் அளித்ததையடுத்து, எடிட் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. 

இந்நிலையில், அப்படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகளை நீக்கி மறு தணிக்கை சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது.