சர்காரிடம் தோற்றுப்போன ‘பேட்ட’!

 

சர்காரிடம் தோற்றுப்போன ‘பேட்ட’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் விஜய்யின் ‘சர்கார்’ சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் விஜய்யின் ‘சர்கார்’ சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. முழுக்க முழுக்க ரஜினிஸம் பேசும் இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

ஹாஸ்டல் வார்டனாக ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தில் இரண்டு விதமான கெட்-அப்களில் ரஜினிகாந்த் அசத்தியுள்ளார். ஆக்‌ஷன், காமெடி என அனைத்து ஜானரிலும் ஸ்கோர் செய்திருக்கும் ‘பேட்ட’ டிரைலர் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், பேட்ட படத்தின் டிரைலர் வெளியான 40 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னதாக வெளியான தளபதி விஜய்யின் ‘சர்கார்’ திரைப்பட டீசர் வெளியான 10 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் சாதனை படைத்திருந்தது. இதனால் சர்கார் படத்தின் சாதனையை பேட்ட திரைப்படம் முறியடிக்க தவறிவிட்டது. எனினும், ட்விட்டரில் உலகளவிலும், இந்தியளவிலும் சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட திரைப்படம் குறித்த ஹேஷ்டேக்குகள் ட்ர்ண்டாகி வருகின்றன.