சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 80 புள்ளிகள் வீழ்ச்சி

 

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 80 புள்ளிகள் வீழ்ச்சி

தொடர்ந்து பல வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு பங்குச் சந்தை இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்தது.

கடந்த டிசம்பரில் சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம் உயர்ந்தது. அமெரிக்கா-சீனா இடையே இன்று கையெழுத்தாகும் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என கூறப்படவில்லை என அமெரிக்கா தகவல். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.

பணவீக்கம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஹீரோமோட்டோகார்ப், டைட்டன், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்தரா உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் வங்கி மற்றும்  டெக் மகிந்திரா உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஹீரோமோட்டோகார்ப்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,485 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,045 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 183 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.159.70 லட்சம் கோடியாக உயர்ந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 79.90 புள்ளிகள் சரிவு கண்டு 41,872.73 புள்ளிகளில் முடிவுற்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 19 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,343.30 புள்ளிகளில் நிலை கொண்டது